வெள்ளி, 29 செப்டம்பர், 2017

முத்துக்குளித்தல்

முத்துக்குளித்தல்

முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel)எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

வரலாறு   

முத்துக்குளிப்போர் பயன்படுத்தும் உடை குவைத் கடல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா வழியாக சேகரித்தல் முத்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியர்கள் பாரசீக வளைகுடாப் பகுதியில் முத்தெடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் முத்துக்குளிப்பதில் 'அமா'(AMA) எனப்படும் பெண்கள் முத்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். 'அமா' என்றால் கடல் பெண் என்று பொருளாகும். கி.பி. 1800 களில் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் முத்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபடும் ஒரு தொழிலாக முத்துக் குளித்தல் விளங்கியது. தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சிறந்த மூச்சுப்பயிற்சியுள பழங்குடியினப் பெண்கள் முத்துக் குளித்தலில் ஈடுபட்டனர். 1930 வரை பாரசீக வளைகுடாப்பகுதியில் முத்தெடுத்தல் ஒரு மாபெரும் தொழிலாக விளங்கியது.பாரசீக முத்துகளின் நிறம் மற்றும் அதிக ஒளிர்வு ஆகியவற்றால் விலை மதிப்பு மிக்கதாக விளங்கின. ஆனால் எண்ணெய் ஏற்றமதி தொடங்கியதும் கடல் நீர் மாசுபாடு காரணமாக அந்த பகுதியில் ஒரு முக்கிய தொழிலாக இருந்த முத்து வேட்டை முடிவுக்கு வந்தது.

ஆசியாவில் முத்து சிப்பிகள், கடலின் மேற்பரப்பில் இருந்து 5லிருந்து 7 அடி (1.5-2 மீட்டர்) ஆழத்தில் காணப்பட்டன. ஆனால் தரமான முத்து சிப்பிகளைக் கண்டுபிடிக்க 40 அடி (12 மீட்டர்)முதல் 125 அடி (40 மீட்டர்) ஆழம் வரை கூட போக வேண்டியிருந்தது இந்த ஆழமான மூழ்குதலில் பல்வேறு ஆபத்துகள் இருந்தன.

இலங்கையில் முத்து சேகரித்தல்- 1926 களில்

19 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் மிகவும் அடிப்படை தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி முத்தெடுத்தல் நடைபெற்றது. எடுத்துக்காட்டாக கடுங்குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக அவர்களின் உடலில் கிரீஸ் தடவிக்கொண்டனர். தங்கள் காதுகளில் கிரீஸ் தடவப்பட்ட பருத்தி வைத்துக்கொண்டும் தங்கள் மூக்கில் ஒரு ஆமையின் ஓட்டையும் அணிந்தனர். ஒரு பெரிய பாறையிலிருந்து குதித்து நீந்தி ஆழத்திற்குச் சென்றனர். மேலும் சிப்பியைச் சேகரிக்க ஒரு கூடையினையும் அவர்கள் இடுப்பில் கட்டியிருந்தனர.

இந்தியாவை பொறுத்தவரை முத்துக் குளித்தல் அரசாங்கத்திற்குச் சொந்தமான பண்ணைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. முத்துக் குளிக்கும் போது பெறப்படும் சிப்பிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அரசாங்கத்திடம் அளித்தல் வேண்டும். பண்டைய தமிழகத்தில் குறிப்பாக முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இத்தொழில் பரதவர் எனப்படும் சமூகத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.] இப்பகுதியில் கிடைத்த முத்து கீழை முத்து என பெயர் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர்களின் காரணமாக இத்தொழில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பிலிப்பைன்சில் குறிப்பாக சூலூ தீவுக் கூட்டத்தில் பெரிய முத்துகள் சேகரிக்கும் தொழில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு ஆழமான, தெளிவான, மற்றும் விரைவான அலைகடலின் ஆழத்தில் பெறப்பட்ட முத்து "உயர் கலப்பின" முத்துகள் என்று கண்டறியப்பட்டன. இது உலகின் மிகச்சிறந்த முத்தாகக் கருதப்பட்டன. பெரிய முத்துகள் சுல்தானின் ஆணைப்படி பெரிய முத்துக்களைச் சேகரித்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவர் மரண தண்டனைக்கு ஆளாக நேரிடும். ஆனாலும் பலர் திருட்டுத்தனமாக முத்துச் சேகரித்து ஐரோப்பாவின் பல செல்வக் குடும்பங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

அமெரிக்காவிலும் பூர்வ குடி அமெரிக்கர்கள் நன்னீர் ஏரிகளிலும், ஓஹியோ ஆறு, டென்னஸி ஆறு, மிசிசிபி ஆறு போன்ற ஆறுகளில் இருந்தும் முத்தினை அறுவடை செய்கின்றனர்.மேலும் கரீபியன் கடல், மத்திய மற்றும் தென் அமெரிக்கக் கடலோரங்களில் வெற்றிகரமாக கடல் முத்து எடுக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் (நவீன கொலம்பியா மற்றும் வெனிசுலா வடக்கு கடலோரங்களில்) காலனிய அடிமை முறை, புழக்கத்தில் இருந்த போது கடலில் மூழ்கி முத்தெடுக்க அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வாறு முத்தினைத் தேடி இவர்கள் கடலுள் மூழ்கும் போது கடல் சுறாவின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானர்கள் இதனால் இவர்கள் இறக்கவும் நேரிட்டது. எனினும் சில நேரங்களில் இவற்றிலிருந்து மீண்டு ஒரு பெரிய முத்தைக் கண்டுபிடித்த ஒரு அடிமைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

முத்தெடுக்கும் இடங்கள்    தொகு

முத்துக்குளிக்கும் இடங்கள் உலகில் மிகச் சிலவேயுள்ளன.

பாலத்தீன் வளை குடாவில் உள்ள பஹ்ரைன்,
இலங்கையிலுள்ள சிலாபம் மற்றும் மன்னார் வளைகுடா
இந்தியாவில் உள்ள தூத்துக்குடி
ஜப்பானில் உள்ள டோக்கியோ கடல்,
குலூத்தீவுகள் அமைந்துள்ள கடல் பிரதேசம்
ஆஸ்திரேலியாவின் வடக்கு மேற்குக் கரையோரங்கள்,
கலிபோர்னியாக் கடல் என்பவை அவையாகும்.
முத்துச் சேகரித்தல்   

Female pearl divers next to Kokichi Mikimoto, inventor of cultivating pearls. Japan, 1921.
முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.

முத்துக் குளிப்போர்   

ஒரே மூச்சில் 100 அடி ஆழம் வரை நீந்தி சுமார் இருபது மீற்றர் ஆழமுள்ள கடல்படுக்கையில் காணப்படும் சிப்பிகளைச் சேகரிக்க வேண்டும். எண்பது முதல் தொண்ணூறு செக்கினில் இது பெறப்பட வேண்டும். மூச்சை அடக்கவும் தன் மீது அழுத்தும் கடல் நீரின் கனத்தைக் தாங்கக் கூடியவராகவும் இருத்தல் அவசியம். புதிதாக இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மூக்கிலும், காதிலிருந்தும் இரத்தம் கசிவது தவிர்க்க முடியாததொன்றாகும். மேலும் இவர்கள் மனிதனை விழுக்கக் கூடிய பெரிய சுறா மீன்கள் அண்மிக்கும் வேளையில் சமயோசிதமாக தப்பிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதற்கு அவர்கள் கூரிய கருங்காலித் தடிகளைத் தம்வசம் வைத்துக் கொள்வர்.

முத்துக் குளிக்கும் ஒருவர் தவறுதலாக அதிக நேரம் கடலினுள் தங்கிவிட்டால் மூச்சுத் திணறி இறக்கவும் நேரிடும். பண்டைக்காலத்தில் இப்பணியில் ஈடுபடுபவர்கள் உடல் வலிமையையும், அகன்ற மார்பும் கறுத்த நிறமுடையவராக இருந்தனர். ஆனால் தற்போது அதற்கான தனிப்பட்ட உடை, நீரினுள் எளிதாக சுவாசிக்க உயிர்வளிமம் (ஆக்சிஜன்) நிரப்பப்பட்ட சிறிய உருளைகளையும் தலைக் கவசத்தையும் அணிந்த பின்பு கடலினுள் இறங்குகின்றனர்.

முத்தெடுக்கும் முறை   

சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள்.

இன்றைய நிலை   

1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவரால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் செயற்கையாக முத்துக்களைப் பெறுகின்றனர். அதற்கான சிப்பி மற்றும் மட்டிகளை வளர்க்கும் பண்ணை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உயர் தரமுடைய ஏராளமான முத்துகள் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஜப்பானில் 'அமா' எனப்படும் பெண் முத்துக்குளிப்போர் தற்போது சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர்.

புதன், 27 செப்டம்பர், 2017

பூக்காமல் இருக்காதே

"நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு..
ஆனால் பூக்க மறந்திடாதே..!"

-ஓஷோ..

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

யாப்பெருங்கலக்காரிகை

தற்சிறப்புப் பாயிரம்

கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்து, அசை, சீர்
பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே! 1

அவையடக்கம்

தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே. 2

சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம், பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. 3

உறுப்பியல்

எழுத்து

குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே
மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்
சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைஇய நுண்ணிடையாய்
அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே. 4

அசை

குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று
அறிவேய் புரையுமென் தோளி உதாரணம்ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே. 5

சீர்

ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப
வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. 6

வாய்பாடு

தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே. 7

தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால்
எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும் இனியவற்றுட்
கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியோடொக்கும்
ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கும் ஒண்தளைக்கே. 8

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே. 9

குறுந்தொகை

குறுந்தொகை 84 KurunThogai 84

Her body is as warming cool as water lily expose in hugging I hugged my lover. A little span of time space passed. Then, again, I hugged her. “I am feeling perspired”, she added. (That is her intention, that I should hug her without break.)  

Her body is warming cold in sweet. That is like water-lily. There is a sweet fragrance in her body like that of smell in Vengai and forest-lily flowers; the flowers, specifically blossoming in the mountain Pothigai in the region of King ‘Ai’.

காந்தள்
இந்த மலர் போல் அவள் மேனி மணக்கும் வேங்கை மலர்
இந்த மலர் போல் அவள் மேனி மணக்கும் என் காதலியைத் தழுவினேன்.

சற்றே இடைவிட்டு மீண்டும் தழுவினேன்.

“நான் வியர்த்துப் போனேன்” என்று கூறினாள்.

(இடைவிடாமல் தழுவிக்கொண்டே இருக்கவேண்டும் என அவள் விரும்புகிறாள்)

அவள் ஈரமானவள்.

ஆம்பல் மலர் போல் குளுமையானவள்.

வேங்கை, காந்தள் மலர்கள் போல் மணக்கும் மேனி உடையவள்.

மழைமேகம் தவழும் பொதியமலை மலர்கள் போல் ஈரமானவள்.

கொடை வள்ளல் ஆய் அரசன் ஆளும் பொதியமலை போன்றவள்.

காலிலே வீரக்கழல் அணிந்த ஆய் அவன்.

எண்ணுவோம்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொண் டற்றே பசப்பு – திருக்குறள்.

பாடல் சொல் பிரிப்பு நிலை

பாலை

பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்;

இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே

கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி,

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மோசிகீரன் பாடல்

புதன், 20 செப்டம்பர், 2017

அன்னை திரேஸா

"புன்னகை..
எங்கள் தாய்மொழி.."

#உலக அமைதி நாள்..
#September21..

Pecha kucha(பெச்சாகுச்சா)

ரொமானியாவின் குளுச்-நபோகாவில் நடந்த 'பெச்சகுச்சா இரவு' நிகழ்வில் ஒரு பேச்சாளர்

பெச்சகுச்சா அல்லது பெச்ச குச்சா ( Jappanes மொழியில்கிசுகிசு என்பதாகும்) என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு முன்வைப்பு வடிவம் ஆகும் (மொத்தம் 6 நிமிடங்கள் 40 நொடிகள்). முன்வைப்புப் படவில்லைக் காட்சிகளைத் திட்பமாகவும், விறுவிறுப்பாகவும் ஆக்கும் இவ்வடிவத்தை முன்னிறுத்தி பெச்சகுச்சா இரவுகள் என்ற உரையரங்கங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

டோக்கியோவில் உள்ள கிளெயின் டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்டிரிட் கிளெய்ன், மார்க் டீதம் ஆகியோரால் ரொப்பொங்கியில் உள்ள சூப்பர்டீலக்ஸ் என்ற தங்களது பரீட்சார்த்த நிகழ்த்துவெளிக்கு மக்களைக் கவரவும்; இளம் வடிவமைப்பாளர்கள் தங்களுக்குள் கூடி, தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காகவும்பிப்ரவரி 2003 இல் பெச்சகுச்சா இரவு முதலில் வடிவமைக்கப்பட்டது.

2004 இல் சில ஐரோப்பிய நகரங்கள் இத்தகைய பெச்சகுச்சா இரவுகளை நடத்தத் தொடங்கிய பிறகு உலக முழுக்க நூற்றுக்கணக்கான நாடுகளில் இத்தகைய இரவுகள் நடக்கின்றன.மே 2014 இல் உலகளாவிய அளவில் 700 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பெச்சகுச்சா இரவுகள் அரங்கேறின.

வடிவம்

வகைமாதிரியான பெச்சகுச்சா இரவொன்றில் 8 முதல் 14 முன்வைப்புக் காட்சிகள் நடக்கும். ஒவ்வொன்றிலும் 20 படவில்லைகள் காட்டப்படும். ஒவ்வொரு வில்லையும் 20 நொடிகளே காட்டப்படும். சில நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இவ்வடிவத்தில் அவர்களே சில மாறுதல்கள் செய்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள குரோனிஞ்சன் நகரில் இரண்டு காட்சிகள் நேரடி இசைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு காட்சியின் இறுதி 20 நொடிகளும் விழா ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்தவர்களின் உடனடி விமர்சனத்துக்காக ஒதுக்கப்படுகின்றன.

வழக்கமாக கலைத்துறை, வடிவமைப்பு, கட்டிடக்கலை, ஒளிப்படக் கலை முதலிய படைப்பூக்கப் புலங்களைச் சேர்ந்தவர்களே பார்வையாளர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்வில் கல்விப்புலம் சார்ந்தவர்களும் பங்கெடுப்பதுண்டு.பெரும்பாலான முன்வைப்பாளர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் தொழில்முறை வடிவமைப்பாளர்களாக இருந்தாலும், தங்களது பயணங்கள், ஆய்வுச் செயல்திட்டங்கள், பொழுதுபோக்குகள், சேகரிப்புகள், ஏனைய விருப்பங்கள் குறித்தும் பேசுவதுண்டு. சில நிகழ்வுகளில் காணொலிக் கலை வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டது உண்டு.

பெச்சகுச்சா இரவு தொடங்குவதற்கான நெறிமுறை

பெச்சகுச்சா இரவு நிகழ்ச்சி நடத்த விழைபவர்கள் பெச்சகுச்சா அமைப்பைத் தொடர்புகொண்டு ஒரு முறைசாரா விண்ணப்ப நடைமுறைக்குப் பிறகு "கைகுலுக்கும்" ஒப்பந்தம் ஒன்றைப் பரிமாறிக் கொள்கின்றனர்.பெச்சகுச்சா இரவுகளுக்கு அனுமதி வரம்பு என்று எதுவும் இல்லை. எவரும் கலந்து கொள்ளலாம்.

பெச்சகுச்சா என்பது கிளெய்ன்- டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தின் பதிவுபெற்ற வணிகப்பெயராகும்.பெச்சகுச்சா பயன்பாட்டு விதிமுறைகளின்படி முன்வைப்பாளர்கள் "அவர்கள் நிகழ்த்திய காட்சியை மீளாக்கம் செய்துகொள்வதற்கான சில தனிப்பட்டதல்லாத உரிமைகளையும், உரிமங்களையும் வழங்க" முன்வர வேண்டும். நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் உலகளாவிய பெச்சகுச்சா டெய்லி வலைப்பூவில் வெளியிடப்படுவதோடு,காணொலி வடிவங்களும் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

Spartacus

ஸ்பார்ட்டகஸ்: அடிமை சமுதாய சரித்திர நாவல் (Spartacus: Fast Novel) என்பது 1951 ஆம் ஆண்டில் வெளியான ஒரு வரலாற்று நாவல் ஆகும். இதனை அமெரிக்காவை சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளருமான ஹோவர்ட் பாஸ்ட் எழுதினார். இது கி.மு. 71 ஸ்பார்டகஸ் தலைமையில் வரலாற்று அடிமை எழுச்சி பற்றி விவரிக்கிறது. இப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட ஸ்டான்லி குப்ரிக் 1960ல் திரைப்படமாக வெளியிட்டார்.

ஸ்பார்ட்டகஸ்நூலாசிரியர்ஹவார்ட் ஃபாஸ்ட்நாடுஅமெரிக்காமொழிஆங்கிலம்வகைவரலாற்றுப் புதினம்வெளியீட்டாளர்ஹவார்டு ஃபாஸ்ட் / புளூ ஹெரன் பதிப்பகம்(தமிழில்:ஏ.ஜி.எதிராஜுலு)

வெளியிடப்பட்ட தியதி

1951ஊடக வகைஅச்சு (தடித்த, நூல் அட்டை)பக்கங்கள்363 பக்கங்கள்
OCLC144801069

உலகம் முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியது இப்புதினம். இரத்தவெறி பிடித்த ரோமபுரி ஆட்சியாளருக்கு எதிரான அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்ட தீவிரப் போராட்டம் நடத்தியவன் ஸ்பார்டகஸ். இவர் செய்த புரட்சி, வரலாற்று இரும்புக்கால்களின் கிழே நசுக்கிவிட்டது. சரித்திரத்தின் இருட்டறையில் அமிழிந்துவிட்ட அந்த உணர்ச்சியமான கதையை வெளிக்கொணர்ந்தது பாஸ்ட் நம் முன்னே வைத்துள்ளார்.

காந்தாரி

காந்தாரி மிளகாய்