மனசாட்சி
💐எல்லாம் ஒரு கட்டத்தில் என்னை விட்டு போய் விடும்..!
💐எதுவும் என்னுடன் நிரந்தரமாக இருக்க போவது இல்லை..!
💐எனது நம்பிக்கை என்னை வழிநடத்தும் ஒரு கட்டத்தில் அதுவும் என்னை விட்டு போகும் போது அந்த கணம் என்ன இருக்குமோ? 😭
💐வாழ்வு என்பது பிடித்ததில் மகிழ்ந்து அதை இழந்து விடுவது..!
🌷 ஒரு ரோஜாப்பூ செடியில் இருந்து இயற்கையாய் உதிர்வதற்கும் அதை பிடுங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை நான் உணர்ந்து புரிவதற்குள் எவ்வளவு இழப்புகளை சந்திக்க வேண்டி உள்ளது..!
💐உலக விஷயங்கள் புரிய புரிய மனம் வெறுமையை நோக்கி நகர்ந்து தனிமையை விரும்புகிறது..!
💐ஒரு முள் என் காலில் குத்துவதற்கு முன் அதை பற்றி எவ்வளவு தகவல்கள் கற்பனைகள் ஆழ்ந்த சிந்தனை இது எல்லாம் காலத்தை விரயமாக்கியது என்று முள் குத்திய பிறகு புரிகிறது..!
💐அன்பு நீருற்று போல் ஊறும் இதயத்தில், எரிமலை போல் கொப்பளிக்கும் கோபமும் உள்ளது..!
💐ஒரு கால் பந்து விளையாட்டில் கோல் போடுவது இலக்கு என்று போட்டு முடித்த பிறகு எல்லாம் முடிந்து விடுவதில்லை மீண்டும் அடுத்த கோல் போட தயார் ஆகிறான்..!
💐பிரபஞ்ச விளையாட்டில் வாழ்க்கை என்னும் சுழற்சியில் மரணம் என்பது இலக்கு அது முடிந்ததும். அடுத்து பிறந்து இலக்கை அடைய நான் முயற்சிக்கிறேன்..!
💐இப்படி சிந்தித்தாலும் சிந்தனையை தாண்டிய ஒன்று என்னை பார்த்து மெளனமாய் சிரிக்கிறது 😁
💐மெளனம் பேச்சில் இல்லை ஆனால் பேசும் அது ஒரே ஒரு முறை பேசிவிட்டால் என்னை போல் ஊமை இவ்வூலகில் யாரும் இருக்க மாட்டார்கள்..!
💐எதையுமே புரியாத முட்டாளாக உள்ளேன் இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ ? 😭
🌷 தொடரட்டும் இந்த பயணம் முடிவில்லா முடிவை உணரும் வரை..!🌷